Advertisment

தமிழிலும் வெளியாகிறது ராய் லட்சுமியின் கவர்ச்சிப் படமான ‘ஜூலி 2’

கவர்ச்சி தூக்கலான இந்தப் படத்தில், ராய் லட்சுமியுடன் சேர்ந்து பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன், ஆதித்யா ஸ்ரீவஸ்வதா ஆகியோர் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
julie 2, tamil release

ராய் லட்சுமி நடித்துள்ள ஹிந்திப் படமான ‘ஜூலி 2’, தமிழிலும் ரிலீஸாகிறது.

Advertisment

தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் ராய் லட்சுமி நடித்துள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. 2004ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்தில் நேகா துபியா நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க ஹீரோயின்கள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படம்.

கவர்ச்சி தூக்கலான இந்தப் படத்தில், ராய் லட்சுமியுடன் சேர்ந்து பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன், ஆதித்யா ஸ்ரீவஸ்வதா ஆகியோர் நடித்துள்ளனர். ராய் லட்சுமி ஹிந்தியில் அறிமுகமாகும் படம் இது. வருகிற 24ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ஹிந்தி மட்டுமின்றி, தமிழிலும் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர். ஃபைவ் ஸ்டார் மீடியா ரங்கநாதன், தமிழில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் டிரெய்லர்:

Tamil Cinema Bollywood Raai Laxmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment