Advertisment

விஜய் டிவி ஹிட் சீரியலில் முக்கிய நடிகை விலகலா? ஷாக் ஆகும் ரசிகர்கள்

Serial Actress Rachitha quitting from naam iruvar namakku iruvar 2 serial Tamil News: 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை 'ரச்சிதா மகாலட்சுமி' தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Rachitha Mahalakshmi Tamil News: rachitha quitting naam iruvar namakku iruvar 2 serial

Rachitha Mahalakshmi Tamil News: விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுள் 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' சீரியலும் ஒன்று. கடந்த 2 வாரங்களாக பல திருப்பங்களுடன் சூடு பிடித்துள்ள இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சீரியலில் வரும் முத்துராசை யார் கொன்றது என்ற கேள்வி பலரையும் குழப்பி எடுத்த நிலையில், அவரை கொன்றது காயத்ரி தான் என்று தெரிய வந்துள்ளது.

Advertisment
publive-image

இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ள 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை 'ரச்சிதா மகாலட்சுமி' தற்போது விலக உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஒரு கன்னட படத்தில் நடிக்க உள்ளார் எனவும், இதனால் தான் அவர் சீரியலில் இருந்து விலகப்போகிறார் எனவும் செய்தி பரவுகிறது. இவர் ஹீரோயினாக நடிக்கும் படத்தை இயக்கும் குருபிரசாத் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

publive-image

இந்த செய்திகள் குறித்து ரச்சிதா இதுவரை எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், இது பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி இருந்தும் அவர் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை.

publive-image

'நாம் இருவர் நமக்கு இருவர் 2' சீரியலுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க ரச்சிதாவும் ஒரு காரணமாக இருந்து வரும் நிலையில், அவரது ரோலில் வேறு யார் நடித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என சில ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

publive-image

சமூக வலைதளங்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை சம்பாதித்துள்ள ரச்சிதா, அவர் புல்லட் ஓட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பைக் ரைடர் போல உடையணிந்திருக்கும் அவர் ராயல் என்பீல்டு மீடியர் வகை வண்டியை ஸ்டைலாக ஓட்டிச் செல்கிறார். அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

publive-image

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Serial Actress Tv Serial Serial Actress Rachitha Mahalakshmi Tamil Serial Update Vijaytv Serial Naam Iruvar Namakku Iruvar Actress Rachitha Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment