Advertisment

ஷாட்ஸ், பனியன்… ஃபாரின் டூரில் செம்ம மாடர்னாக ராதிகா சரத்குமார்!

நடிகை ராதிகா சரத்குமார் ஃபாரின் டூரில் மாடர்ன் காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
ஷாட்ஸ், பனியன்… ஃபாரின் டூரில் செம்ம மாடர்னாக ராதிகா சரத்குமார்!

வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நடிகை ராதிகா சரத்குமார் அங்கே ஷாட்ஸ், பனியன் என செம்ம மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ராதிகா சரத்குமார் ஃபாரின் டூரில் மாடர்ன் காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா சினிமாவில் அறிமுகமாகி 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு, சீரியலில் களமிறங்கிய நடிகை ராதிகா, சின்னத்திரையில் வெற்றிக்கொடி நாட்டினார்.

சின்னத்திரையில் சிரியல்களில் பிஸியாக இருந்த ராதிகா சரத்குமார், அவ்வப்போது சினிமாக்களில் இளம் ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, சீரியல்களில் இருந்து முற்றிலும் விலகிய ராதிகா, தனது கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் பொறுப்பாளராக தீவிர அரசியலில் செயல்பட்டு வருகிறார்.

நடிகை ராதிகா பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதில் தயங்குவதில்லை. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது, குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்று அங்கே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ராதிகாவின் புகைப்படங்களுக்கு சமூக ஊடகங்களில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

அந்த வகையில், தற்போது ஃபாரின் டூர் சென்றுள்ள நடிகை ராதிகா, அங்கே ஷாட்ஸ், பனியன் என செம்ம மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர் சென்றுள்ள ராதிகா அங்கே அங்கே மாடர்ன் காஸ்ட்யுமில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ராதிகா இன்னும் அவருடைய இளமைக் காலத்தில் இருந்தது போலவே இன்னும் ஸ்டைலாக இருக்கிறார் என்று கம்மெண்ட் செய்து அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment