Advertisment

Raja Rani 2 Serial: சந்தியா சென்ற பஸ் ஆக்சிடென்ட்… ஆனா இது அந்த படத்தின் காட்சியாமே?

ராஜா ராணி 2 சீரியலின் லேட்டஸ்ட் புரமோவைப் பார்த்த நெட்டிசன்கள் இது ஜெய் - அஞ்சலி நடித்த பிரபலமான ஒரு படத்தின் காட்சி என்று நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Raja Rani 2 Serial, vijay TV Raja Rani 2 Serial latest promo, ராஜா ராணி 2 சீரியல், எங்கேயும் எப்போதும், விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல் லேட்டஸ்ட் புரமோ, Raja Rani 2, Raja Rani 2 Serial promo like Engeyum Eppothum movie scene, Vijay TV, Engeyum Eppothum movie, Engeyum Eppothum

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோ சரவணனும் ஹீரோயின் சந்தியாவும் பிரிந்து செல்கிறார்கள். சந்தியாவை பஸ்ஸில் ஏற்றிவிட்டு அவளை பிரிய மனமில்லமால் அவளுக்கு தெரியாம அதே பஸ்ஸில் அவளுடன் செல்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் விபத்துள்ளாகி இருவரும் இணையும் புரமோ வெளியாகி உள்ளது. இந்த புரமோவைப் பார்த்த நெட்டிசன்கள் இது ஜெய் மற்றும் அஞ்சலி நடித்த பிரபலமான ஒரு படத்தின் காட்சி என்று நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில், படித்த சந்தியாவும் படிக்காத சரவணனும் சூழ்நிலையால் இருவருக்கும் திருமணம் ஆகிறது. சந்தியாவின் தோழி அவளுக்கே தெரியாமல் டிவோர்ஸ் பேப்பரை ஹேன்ட் பேக்கில் வைத்துவிடுகிறாள். டிவோர்ஸ் பேப்பரைப் பார்த்த சரவணன் தனது மனைவி சந்தியா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று செல்ல விரும்புவதாக தவறாக நினைத்துக்கொண்டு, அவள் நல்லபடியாக வாழ வேண்டும். அவளுடைய ஐபிஎஸ் கனவு நிறைவேற வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் தடுத்தாலும் அவளை வீட்டில் இருந்து அனுப்புகிறான்.

சந்தியாவை ஊருக்கு அனுப்பவதற்காக கூட்டுரோடுக்கு சென்று பஸ்ஸில் ஏற்றி அனுப்புகிறான். பஸ் கிளம்பி வேகமாக போகிறது. ஆனால், சந்தியாவைப் பிரிய மனமில்லாமல், வேகமாக ஓடி பஸ்ஸில் ஏறும் சரவணன் சந்தியாவுக்கே தெரியாமல் அதே பஸ்ஸில் அவளுடன் செல்கிறான். ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவும் சரவணனும் பிரிகிறார்கள் என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

கதையின் இந்த சூழலில்தான், ராஜா ராணி 2 சீரியலின் புரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், சந்தியாவுடன் கடைசி பயணமாக அதே பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறான். அப்போதுதான் எதிர்பாராத விதமாக ஒரு லாரி வேகமாக வந்து பஸ் மீது பயங்கரமாக மோதுகிறது. பஸ்ஸில் இருந்த எல்லோருக்கும் காயம். விபத்து குறித்து தகவல் அறிந்து ஆம்புலன்ஸ், டாக்டர், நர்ஸ், போலீஸ் எல்லாமே வந்துவிடுகிறார்கள். பஸ்ஸுக்குள் இருந்த சந்தியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் சரவணன், சந்தியா என்று கத்தி பெருங்குரலெடுத்து அழுகிறான். அதே போல, சந்தியா, விபத்தில் பஸ்ஸில் காயமடைந்த ஒரு சிறுவனைக் தூக்கிக்கொண்டு காப்பாற்றுங்கள் என்று கத்தி அழுகிறாள். சந்தியாவின் குரலை கேட்டது சரவணன், கண்ணீரும் அதிர்ச்சி காதல், அன்பு எல்லாம் கலந்து உணர்ச்சி பெருக்குடன் ஓடி சந்தியாவின் கண்ணங்களை தனது கைகளில் பற்றி கட்டி பேரன்புடன் கட்டி அணைக்கிறான். சந்தியாவும் அதே போல, சரவணை அணைத்துக்கொள்கிறாள். இப்படி ராஜா ராணி 2 சீரியலின் ஒரு உணர்ச்சிகரமான புரமோ வெளியாகி உள்ளது.

ஆனால், ராஜா ராணி 2 சீரியலின் இந்த புரமோ வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது ஜெய் - அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் படத்தின் காட்சி என்று கூறி உங்களுக்கு ஒரிஜினலா ஸ்கிரிப்ட் எழுத வராதே என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

publive-image

ராஜா ராணி 2 சீரியல் புரமோவுக்கு கம்மெண்ட் செய்துள்ள ஒரு நெட்டிசன், “என்னப்பா… எங்கேயும் எப்போதுமா? அது சரி… உங்களுக்குதான் ஒரிஜினலா ஸ்கிரிப்ட் எழுத வராதே” என்று விமர்சித்துள்ளார்.

மற்றொரு நெட்டிசன், “எங்கேயும் எப்போதும் மூவில இருந்து இந்த சீன் எடுத்தீங்களா” என்று கேட்டுள்ளார்.

publive-image

அதே நேரத்தில் சில ரசிகர்கள், ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோ சித்துவின் நடிப்பு சூப்பராக இருக்கிறது. அவருக்காகவே இந்த சீரியலைப் பார்ப்பதாகக் கூறி கம்மெண்ட் செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Alya Manasa Raja Rani 2 Raja Rani 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment