Advertisment

ரீல் திருமணத்திற்கு முன்பே ரியல் திருமணம்... சின்னத்திரை நடிகருக்கு குவியும் வாழ்த்துக்கள்

சீரியலில் சரவணனின் முதல் தம்பி செந்திலாக நடித்து வரும் நடிகர் பாலாஜி தியாகராஜனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
கர்ப்பிணி பெண் ரத்தம் கொடுக்கலாமா? விமர்சனத்திற்கு உள்ளான விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலிகளில் ஒன்று ராஜா ராணி 2. ஆல்யா மானசா சஞ்சீவ் முக்கிய கேரக்டரில் நடித்த ராஜா ராணி முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2-வது சீசன் தொடங்கப்பட்டது. முதல் சீசனில்ல நடித்த ஆல்யா மானசா நாயகியாக நடித்த இந்த சீரியலில் நாயகனாக திருமணம் சீரியல் சித்து நடித்து வருகிறார்.

Advertisment

ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் நாயகி சந்தியா தனது கணவரின் உதவியுடன் எப்படி தனது கனவை நிறைவேற்றுகிறாள் என்பதை அடிப்படையாக கொண்ட இந்த கதையில் சந்தியாவாக நடித்து வந்த ஆல்யா மானசா 2-வது பிரசவம் காரணமாக தொடரில் விலகினார். அவருக்கு பதிலாக தற்போது நடிகை ரியா சந்தியாவாக நடித்து வருகிறார்.

publive-image

கடந்த சில வாரங்களாக பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது ஆதியின் திருமணம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. தான் காதலித்து வந்த ஜெஸியை கர்ப்பமாக்கிவிட்டு அவளை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சரவணனின் தம்பி ஆதி சொல்ல, தற்போது சந்தியாவும் சரவணனும் உண்மையை வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சீரியலில் சரவணனின் முதல் தம்பி செந்திலாக நடித்து வரும் நடிகர் பாலாஜி தியாகராஜனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. சீரியலில் துணக்கடை வைத்திருக்கும் செந்தில் கேரக்டர் தனது மனைவி அர்ச்சாவுடன் அடிக்கும் லூட்டி பெரும் காமெடியாக இருக்கும்.

இதனிடையே இன்று காலை பாலாஜி தியாகராஜனுக்கு திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு ராஜா ராணி சீரியல் நடிகர்கள் நேரில் பங்கேற்று மணமக்கள வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raja Rani 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment