Advertisment

எஞ்ஜாய் எஞ்சாமி ஃபீவர்: ராஜா ராணி நடிகையின் அட்டகாச நடனம் வைரல் வீடியோ

ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா எஞ்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடியுள்ளார். ஆல்யா மானசாவின் எஞ்ஜாய் எஞ்சாமி டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
enjoy enjami song, vijay tv, raja rani serial, actress alya manasa dancing for enjoy enjami song, dhee, எஞ்ஜாய் எஞ்சாமி, எஞ்ஜாய் எஞ்சாமி பாடல், தீ, தெருக்குரல் அறிவு, சந்தோஷ் நாராயணன், ராஜா ராணி சீரியல், விஜய் டிவி, therukural arivu, ஆல்யா மானசா நடனம், santhosh narayanan, viral video, alya manasa, alya manasa dance

சந்தோஷ் நாராயணன் இசையில், அவருடைய மகள் தீ கானா ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, ஆகியோர் இணைந்து பாடிய இண்டிபெண்டண்ட் இசைக் கலைஞர்களுக்காக உருவாக்கிய ஆல்பம் பாடல், ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் இதுவரையிலான சினிமா இசையில் இருந்து மாறுபட்டதாகவும் பூர்வகுடி மக்களின் இசையையும் நவீன இசையையும் இணைத்து புதுவிதமாக அமைந்துள்ளது. இந்த ஆல்பம் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இண்டிபெண்டண்ட் இசைக் கலைஞர்களுக்காக உருவாகியுள்ளார். எஞ்ஜாய் எஞ்சாமி பாடலை சந்தோஷ் நாரயாணன் மகள் தீ ராப் பாடகர் தெருக்குரல் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.

தீ பாடியுள்ள எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தீயாக பற்றியுள்ளது. இந்த புதிய இசை கேட்பவர்கள் யாரையும் பற்றிகொள்கிறது. சமூக ஊடகங்களில் எல்லா தரப்பிலும் எஞ்ஜாய் எஞ்சாமி பாடலைப் பற்றிதான் பேச்சாக உள்ளது. சிலர், எஞ்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை பொருத்தமாக தொகுத்து மீம்களையும் வெளியிட்டுள்ளனர். எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் ஃபீவராக பரவி வருகிறது. எஞ்ஜாய் எஞ்சாமி பாடலை யூடியுப்பில் இதுவரை 42 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து கேட்டு ரசித்துள்ளனர்.

இந்த ஆல்பம் பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்காக தீ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதே போல, சந்தோஷ் நாராயணனும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா எஞ்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடியுள்ளார். ராஜா ராணி சீசன் 1 சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 சீரியல் எடுக்கப்பட்டது. 2வது சீசனிலும் ஆல்யா மானசா நாயகியாக நடித்து வருகிறார். தற்போது பாரதி கண்ணம்மா - ராஜா ராணி சீரியல்களின் மகா சங்கமம் எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது.

எஞ்ஜாய் எஞ்சாமி பாடலால் மிகவும் கவரப்பட்ட ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா, எஞ்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆல்யா மானசா எஞ்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

Santhosh Narayanan Vijay Tv Alya Manasa Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment