Advertisment

மகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்!

திருமண கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, நாளை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடக்கவிருக்கிறது. இதில் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினிகாந்த் - Rajinikanth

ரஜினிகாந்த் - Rajinikanth

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர் தனுஷ் நடித்த 3 படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, பிறகு ’வை ராஜா வை’ என்ற படத்தையும் இயக்கினார்.

Advertisment

அனிமேஷன் படித்த இளையமகள் செளந்தர்யா, நிறையப் படங்களில் டைட்டில் டிசைனராகப் பணியாற்றியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய ’கோவா’ படத்தை தயாரித்திருந்த இவர், ரஜினியை வைத்து ’கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தையும் இயக்கினார். தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் இயக்கியிருந்தார்.

செளந்தர்யாவுக்கும் அஸ்வின் என்பவருக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இதற்கிடையே கருத்து வேறுபாட்டால் கடந்த 2017-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். அதன் பிறகு மகன் வேத் உடன் வசித்து வந்தார் செளந்தர்யா.

இந்நிலையில் இவருக்கும், தொழிலதிபர் விசாகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையே துவங்கிவிட்ட இவர்களது திருமண கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, நாளை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடக்கவிருக்கிறது. இதில் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

இதற்கிடையே குடும்பத்தினர் பங்கு பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், முத்து படத்தில் இடம்பெற்றிருக்கும், ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலுக்கு ரஜினிகாந்த் ஜாலி மூடில் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்போதும் மகிழ்ச்சியை விரும்பும் ரஜினியின் உற்சாக ஊற்றை அந்த வீடியோவில் கண்டு மெய்சிலிர்த்து வருகிறார்கள் ரசிகர்கள்!

Rajinikanth Rajini Kanth Soundarya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment