Advertisment

சீனாவில் வெளியாகும் 2.0... பாகுபலியை விஞ்சும் என கணிப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth 2.0 to be release in china - சீனாவில் 2.0 படத்தின் பிரம்மாண்ட ரிலீஸ்! பாகுபலியை மிஞ்சும் என எதிர்பார்ப்பு! ரஜினிகாந்த்

Rajinikanth 2.0 to be release in china - சீனாவில் 2.0 படத்தின் பிரம்மாண்ட ரிலீஸ்! பாகுபலியை மிஞ்சும் என எதிர்பார்ப்பு! ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி சமீபத்தில் கொண்டாடப்பட்டது. விண்டேஜ் ரஜினியை பல வருடங்களுக்கு பிறகு, பேட்ட படத்தில் காண்பித்ததற்காக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூக்கு ரசிகர்கள் ஆரத்தி எடுக்காத குறை தான்.

Advertisment

அடுத்ததாக, ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், சீனாவில் 2.0 படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 2.0 திரைப்படம், பாகுபலி-2க்குப் பிறகு சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்திற்கு அங்கு 'பாலிவுட் ரோபோட் 2.0: ரீசர்ஜன்ஸ்' என்ற பெயரில் ரிலீஸாக உள்ளது.

பாகுபலி-2 படத்தை கொண்டாடிய சீன ரசிகர்கள், தற்போது டெக்னிக்கலாக மிரட்டிய 2.0 படத்தையும் ஆர்ப்பாட்டமாக வெற்றியடைய வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது.

Rajini Kanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment