Advertisment

இளமைத் தோற்றத்தில் ரஜினி டூயட்: அண்ணாத்தே அடுத்த பாடல் ரிலீஸ்

Rajinikanth Annaatthe movie Sara katre song released: அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடலான சாரக் காற்றே வெளியீடு; ரஜினி மிகவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி

author-image
WebDesk
New Update
இளமைத் தோற்றத்தில் ரஜினி டூயட்: அண்ணாத்தே அடுத்த பாடல் ரிலீஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் அண்ணாத்த, வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர் தயாரித்துள்ள அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அண்ணாத்த படத்தின் முதல் பாடலான அண்ணாத்த அண்ணாத்த வெளியிடப்பட்டது. இப்பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி பாடியிருந்தார். விவேகா பாடலை எழுதியிருந்தார். அந்த பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டி.இமான் இசையில் சாரக் காற்றே என தொடங்கும் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.

டூயட் பாடலான சாரக் காற்றே பாடல் ரஜினி மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான காதலைச் சொல்கின்ற விதமாக அமைந்துள்ளது. இந்த டூயட் பாடலை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதனை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பாடல் குறித்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு ரசிகர் இமான் – ஸ்ரேயா கோஷல் கூட்டணியே சூப்பராக இருக்கும்; இப்ப தலைவர் – நயன்தாரா வேற எனப் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், தற்போது இமானை தவிர வேறு யாராலும் நம் பாரம்பரிய தமிழ் இசை உணர்வை பாடலில் தர முடியாது. நீ எப்பவுமே வேர ரகம் இமான் தல என இசையமைப்பாளரை புகழ்ந்துள்ளார்.

மேலும் நிறைய ரசிகர்கள், ரஜினி மிகவும் இளமையாக தெரிவதாகவும், நயன்தாரா பாடலில் செம அழகாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.

சிலர் சித் ஸ்ரீராம் – ஸ்ரேயா கோஷல் வாய்ஸ் மேஜிக் குறித்து ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் மனதை வருடும் மெலோடி, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Annatha Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment