Advertisment

முன்னாள் சூப்பர் ஸ்டாரா… கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்; பிஸ்மி வீட்டுக்கே சென்று வாக்குவாதம்

ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியதால், எங்களுக்கு தூக்கமே வரவில்லை; பிஸ்மி தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் – ரஜினி ரசிகர்கள்

author-image
WebDesk
New Update
Tamil News Update: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழக்கும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்த்-ஐ முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற வாரிசு திரைப்பட விழாவில் நடிகர் விஜய்-ஐ அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்: சூட்கேஸை தொலைத்த ரஜினி… வேஷ்டி- சட்டை கொடுத்து உதவிய விஜயகாந்த்: இந்த நட்பு எத்தனை பேருக்கு தெரியும்?!

இதுதொடர்பாக, சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், தற்போதைய சூழலில் வசூல் ரீதியாக பார்க்கும்போது விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார். இதனை தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் விஜய்-ஐ அந்த இடத்தில் எப்போதோ வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், பிஸ்மிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ரஜினி ரசிகர்கள் 10 பேர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிஸ்மி வீட்டிற்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறிய வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார். மேலும், இதுதொடர்பாக ஊடகங்களில் தனது கருத்துக்களை பிஸ்மி வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார்.

ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியதால், எங்களுக்கு தூக்கமே வரவில்லை என்றும் ரஜினி ரசிகர்கள் கூறினார். மேலும், பிஸ்மியுடன் பேசி பிரச்சனையை சுமுகமாக முடித்துக் கொண்டோம் என்றும் அவர்கள் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment