பேரனுக்கு சர்ப்ரைஸ் தர அமெரிக்காவில் இருந்த வந்த சூப்பர் ஸ்டார்!!!

கேக்கை வெட்டும் போது பின்னால் இருந்தப்படி ரஜினி அதை ரசிக்கும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவின் மகன் வேத் பிறந்த நாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத்திற்கு நேற்று(6.5.18) 3 ஆவது பிறந்தநாள். கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் செளந்தர்யா, வேத்தின் பிறந்தநாளை ரஜினியின் இல்லத்தில் கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் விழாவில் நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். வேத் பிறந்த நாள் கேக்கை வெட்டும் போது பின்னால் இருந்தப்படி ரஜினி அதை ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும், கடந்த வாரம் அமெரிக்காவிற்கு சென்றிருந்த ரஜினி, பேரன் வேத் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் தர அமெரிக்காவில் இருந்து அவசரசரமாக சென்னை வந்தார்.

இந்த பிறந்த நாள் விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இயக்குனர் செளந்தர்யா தன்னுடைய  ட்விட்டர் பக்கத்திலும் தனது செல்ல மகன்  வேத்திற்கு பிறந்தநாள் வாழ்த்தினை  கூறி புகைப்படங்களை பகிரிந்துள்ளனர்.

 

×Close
×Close