நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 4) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் புறப்பட்டுச் சென்றனர். வெள்ளிக்கிழமை, மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கை ரஜினியும், அவருடைய மனைவி லதா ரஜினியும் சந்தித்தனர்.