தனக்கு நிறைய கெட்டப் பழங்கள் இருந்தது என்றும் அன்பால் தனது மனைவி தன்னை மாற்றினார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தம்மன்னா நடித்துள்ளனர். இதன் பர்ஸ்டு லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் உள்ள வாணி மஹாலில், நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் ” சாருகேசி” என்ற நாடகத்தை நடத்தினார். இந்த நிகழ்வில் ரஜினி கலந்து கொண்டு பேசியபோது “ எனக்கு நிறைய கெட்ட நண்பர்கள் , கெட்ட பழக்கங்கள் இருந்தது. நான் நடத்துனராக இருந்தபோது இரண்டு வேளையும் அசைவ உணவு சாப்பிட்டேன்.
மதுபான பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பேன் என்று எனக்கே தெரியாது. எனது மனைவிதான் அவரது அன்பால் என்னை மாற்றினார்” என்று அவர் பேசினார்.