Advertisment

ரிலீசுக்கு முன்பே 120 கோடி வசூல் சாதனை படத்தை 2.0 படம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2.0 movie release, 120 கோடி

2.0 movie release, 120 கோடி

Rajinikanth Starrer 2.0 Movie : இயக்குநர் சங்கரின் 2.0 திரைப்படம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரிலீஸ். 600 கோடி மதிப்பிலான இப்படம் ரிலீசுக்கு முன்பே 120 கோடி வசூலித்துள்ளது.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் ஏமி ஜேக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், செல்போன்களால் ஏற்படும் துயரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. வரும் 29ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம், இப்போதே 100 கோடி வசூலின் பிரம்மாண்டத்தை எட்டியுள்ளது.

Rajinikanth Starrer 2.0 Movie : 120 கோடி வசூல்

இப்படம் வெளியாவதற்கு முன்பே 120 கோடி வசூலை எட்டியுள்ளது என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடி வசூலிப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் வியாபாரம் 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தமிழக தியேட்டரிக்கள் உரிமை ரூ.120 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் இன்னும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கப்படவில்லை. அவ்வாறு முன்பதிவுகள் தொடங்கும்போது நிச்சயம் இதைவிட அதிகமான வசூலையே இப்படம் குவிக்கும் என்றும் படத்தின் புரொமோட்டர்கள் தெரிவிக்கின்றனர்.

3டி மற்றும் 2டி முறையில் வெளியாகும் 2.0 படம் தான் இந்திய சினிமாவிலேயே அதிக பிரம்மாண்டத்துடன் அதிகமான பட்ஜெட்டில் வெளியாகும் படம் என்றும், அதுவும் 3 மொழிகளில் வெளியாகும் படம் என்று பெருமை கொள்கிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment