Advertisment

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா: பா.ரஞ்சித் இயக்கும் வேகமான படம்

பா.ரஞ்சித் இயக்கிய படங்களிலேயே மிகவும் வேகமாக உருவாகி வரும் படம் காலா.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaala

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் காலா திரைப்படம், பா.ரஞ்சித் இயக்கிய படங்களிலேயே மிகவும் வேகமாக உருவாகி வரும் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காலா. கபாலிக்கு பின்னர், ரஞ்சித் - ரஜினி கூட்டணியின் இரண்டாவது படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்த வேளையில் தான் தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி சூசகம் தெரிவித்தார். இதனால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியுள்ளன.

ரஜினியுடன், ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

மும்பையில் தொடங்கப்பட்ட 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்ற ரஜினி, பின்னர் திரும்பி வந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கிய படங்களிலேயே மிகவும் வேகமாக உருவாகி வரும் படம் "காலா"என படக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இப்படத்தின் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், படம் உருவாகி வரும் விதம் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment