ரஜினியின் '2.0' திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் இணையத்தில் கசிவு! அதிர்ச்சியில் படக்குழு!

‘2.0’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ல் எந்திரன் வெளியான திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து, எந்திரன் இரண்டாவது பாகமாக ‘2.0’ என்ற படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஜப்பான், கொரியா உள்ளிட்ட 15 மொழிகளில் வெளியிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth

மிகப்பிரம்மாண்டமாக சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பிரதான காட்சிகளின் அனைத்தும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2.0 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் இணையதளத்தில் கசிந்துள்ளது திரைப்படக் குழுவிற்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close