3 ஆவது முறையாக கர்ப்பமான நடிகை ரம்பா... பிரம்மாண்ட விழா நடத்திய கணவர்!

இந்த வளைக்காப்பு நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர்,ரம்பாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

நடிகை ரம்பா 3  ஆவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.  இதைக் கொண்டாடும் வகையில் அவரின் கணவர் இந்திரகுமார்  கனடாவில் விமர்சியாக  வளைகாப்பு விழா நடத்தியுள்ளார்.

நடிகை ரம்பா வளைகாப்பு :

சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தது அனைவருக்கும்  தெரிந்ததே. இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும்  அழகிய  லைலா பாடல் பட்டித் தொட்டி எங்கும் ரம்பாவை தெரிய வைத்தது.

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரம்பா தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் கணவருடன் கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில்  ரம்பாவிற்கு  அவரின் கணவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றது. அதன் பின்பு, இருவரையும் சமரசம் செய்து சேர்த்து வைத்தனர் இருவரின் குடும்பத்தாரும்.

அதனைத் தொடர்ந்து தற்போது ரம்பா 3 ஆவது முறையாக கர்பமாகியுள்ளார். இந்த தம்பதினருக்கு ஏற்கனவே லாவண்யா மற்றும் சாஷா என்று இரு மகள்கள் உள்ளனர்.  பல்வேறு பிரச்சினைகளை கடந்து ரம்பாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை அவரது கணவர் இந்திரகுமார்  விமர்சியாக நடத்தியுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு கனாடாவில் நடைப்பெற்ற இந்த வளைக்காப்பு நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர்,ரம்பாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close