Advertisment

விஜய் சேதுபதி படத்தில் ரம்யா கிருஷ்ணன்

இந்தப் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோயினாக வேம்பு என்ற கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramya krishnan

விஜய் சேதுபதி நடித்துவரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

Advertisment

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘அநீதி கதைகள்’ என்று முதலில் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ‘சூப்பர் டீலக்ஸ்’ என மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோயினாக வேம்பு என்ற கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார்.

பி.எஸ்.வினோத் மற்றும் நீரவ் ஷா இருவரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில், முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

‘பாகுபலி 2’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இந்தப் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்துள்ளார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர் முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது. சமந்தாவின் கேரக்டர் பற்றி நேற்று வெளியான டீஸர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil Cinema Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment