மாஜி பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோ… ராஷ்மிகா மந்தனா ரெஸ்பான்ஸ் என்னன்னு பாருங்க!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாள் அன்று அவருடைய முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோவுக்கு ராஷ்மிகா அளித்துள்ள பதில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாள் அன்று அவருடைய முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோவுக்கு ராஷ்மிகா அளித்துள்ள பதில் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்தவாரம் திரையரங்குகளில் வெளியான சுல்தான் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியுள்ள ராஷ்மிகா மந்தனாவின் நடிப்புக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளார். ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருடைய பிறந்தநாள் அன்று ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் ரக்‌ஷித் ஷெட்டி இதுவரை யாரும் பார்த்திராத ராஷ்மிகாவின் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

ரக்‌ஷித் ஷெட்டி கிரிக் பார்ட்டி படத்தின் ஹீரோ. இவரும் ராஷ்மிகா மந்தனா காதலித்தனர். 2017-ல் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், விரைவிலேயே இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக்கொண்டனர். இருவரும் பிரிந்துவிட்டாலும் இருவருக்கும் இடையே நல்ல நட்புடன் நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த சூழலில்தான், ரக்‌ஷித் ஷெட்டி ஏப்ரல் 5ம் தேதி ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளில் அவர் கிரிக் பார்ட்டி படத்துக்கு ஆடிஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து ரக்‌ஷித் ஷெட்டி குறிப்பிடுகையில், “கிரிக் பார்ட்டி ஆடிஷனின்போது உன்னுடைய அழகான நினைவுகளில் இருந்து பகிர்ந்துகொள்கிறேன். அப்போதில் இருந்து உன்னுடைய கனவுகளை நிஜமாக்க ஒரு உண்மையான வீராங்கணையாக பயணம் செய்து வருகிறாய். பெண்ணே உன்னை நினைத்து பெருமயாக இருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள்… மேலும் உன்னை வெற்றிகள் வந்து சேரட்டும்.” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ரக்‌ஷித் ஷெட்டி ஷெட்டி பகிர்ந்த ராஷ்மிகா மந்தனாவின் கிரிக் பார்ட்டி படத்தின் ஆடிஷன் வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வைரலானது.

இந்த வீடியோவுக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, “ஆஹ்… எனக்கு ரொம்ப தெளிவாக நினைவிருக்கிறது. மிகவும் நன்றி ரக்‌ஷித் ஷெட்டி.. இது நிறைய பொருள் பொதிந்தது” என்று பதிவிட்டு அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தனது பிறந்தநாள் அன்று முன்னாள் பாய் ஃபிரெண்ட் பகிர்ந்த தனது ஆடிஷன் வீடியோவுக்கு பதிலளித்து ட்வீட் செய்ததால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rashmika mandanna responds to ex boyfriend release her audition video goes viral

Next Story
‘கேப்டன் 7’ அனிமேஷன் சீரிஸில் அறிமுகமாகும் தோனி!MS Dhoni to debut as captain 7 in animated series wife sakshi to produce Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com