scorecardresearch

ரேகா முத்த விவகாரம்: 34 ஆண்டுகள் கழித்து கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்…

நான் அதை திரையரங்குகளில் பார்த்தபோதுதான், இது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தேன்

ரேகா முத்த விவகாரம்: 34 ஆண்டுகள் கழித்து கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்…
punnagai mannan kiss scene

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான ’புன்னகை மன்னன்’ திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. கமல் ஹாசன் நடித்திருந்த இந்தப் படத்தில், ரேகா, ரேவதி என இரு நடிகைகள் நடித்திருந்தார்கள். படத்தின் தொடக்கமே ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற பாடலும், அதைத் தொடர்ந்து கமலும், ரேகாவும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாகவும் காட்சிமைக்கப்பட்டிருக்கும்.

கலவர பூமியான டெல்லி : நெஞ்சை பதற வைக்கும் படங்கள்

கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் கழித்து அந்தத் திரைப்படத்தில் கமல் கொடுத்த முத்தம் திட்டமிடப்படாதது என ரேகா கூறியிருப்பது, சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது. இந்த செயலுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, ரேகாவுக்கு வயது 16.

”இதை நூறு முறை சொல்லியிருக்கிறேன். அவர்கள் அந்தக் காட்சியைப் பற்றி எனக்குத் தெரியாமல் படமாக்கி விட்டனர். மக்கள் என்னிடம் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். அதற்கு நான் பதிலளித்து சோர்வடைந்து விட்டேன்.” என செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ரேகா. அதோடு, தேவையான சில உணர்வுகளை வெளிக்கொணர அந்த முத்தம் படத்திற்கு உதவியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்த ரேகா, ”அந்த முத்தம் திரையில் அசிங்கமாகவோ இல்லை ஆக்ரோஷமாகவோ  தெரியவில்லை. அதற்கான தேவை இருந்தது. ஆனால் நான் அப்போது மிகவும் இளம்பெண். அந்தக் காட்சியைப் பற்றி எனக்குத் தெரியாது. இயக்குனர் கே.பாலசந்தர், ‘கமல், கண்ணை மூடு! நான் சொன்னது உனக்கு நினைவு இருக்கு, இல்லையா?’ என்றுக் கேட்டார். 1, 2, 3 என்று சொன்னதும்  நாங்கள் குதிக்க வேண்டும். அப்போது தான் அந்த எதிர்பாராத முத்தம் நிகழ்ந்தது. நான் அதை திரையரங்குகளில் பார்த்தபோதுதான், இது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தேன்” என்றார்.

“அந்த ஷாட் முடிந்த பிறகும் எங்களுக்கு லொகேஷன் மாற்றம் இருந்தது. இணை இயக்குநர்களாக இருந்த சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வசந்திடம், அந்த முத்தத்தைப் பற்றி எனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அதற்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றும் சொன்னேன். ஒரு சிறிய குழந்தையை முத்தமிட்ட பெரிய ஸ்டார் என நினைத்துக் கொள்ளும்படி, அவர்கள் என்னிடம் சொன்னார்கள். காட்சிக்குப் பிறகு பாலச்சந்தரோ அல்லது கமல்ஹாசனோ அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை” என்றும் ரேகா கூறினார்.

அதோடு, முன்கூட்டியே அந்த காட்சியைப் பற்றி அறிந்திருந்தால் ஒருபோதும் முத்தமிட ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். அவர்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? புன்னகை மன்னன் படம் பெரிய ஹிட்டானது. அதற்குப் பிறகு எனக்கு பல படங்கள் கிடைத்தன. ராமராஜன், இளையராஜா கூட்டணியில் ’நம்ம ஊரு பட்டுக்காரன்’ போன்ற படங்களில் நான் ஒப்பந்தமானேன். அந்த நாட்களில் நாங்கள் அனைவரும் மிகவும் பிஸியாக இருந்தோம், எனவும் ரேகா நினைவுக் கூர்ந்தார்.

மண்வாசனை மேனகா : பாரம்பரிய அரிசியில் அசத்தல் ஐஸ்கிரீம், கட்லெட், நூடுல்ஸ் ரெடி!

பாலச்சந்தரிடமோ, கமல் ஹாசனிடமோ அவர் மன்னிப்புக் கேட்டும்படி கூறவில்லை. ஆனால், அவர் அப்படி சொன்னதாக, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ”மன்னிப்பு கேட்க சொல்வது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் அந்த நேரத்தில் நான் முத்தத்திற்கு ’எஸ்’ சொல்லியிருக்க மாட்டேன் என்பது மட்டும் உண்மை. அவர்கள் திடீரென்று அந்த காட்சியை படமாக்கினார்கள். இப்போது அது முடிந்துவிட்டது, அதை மறுபரிசீலனை செய்ய நான் விரும்பவில்லை” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரேகா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rekha punnagai mannan unplanned kissing scene kamal haasan