scorecardresearch

எமி ஜாக்சனைக் காதலிக்கும் ரோபோ ரஜினி?

இந்தப் படத்திலும் எஜி ஜாக்சன் மீது ரோபோ ரஜினிக்கு காதல் பிறந்திருக்குமோ என்ற எண்ணத்தை அந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

‘2.0’ படத்தின் போஸ்டர் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரோபோ ரஜினியும், எமி ஜாக்சனும் அருகருகே காதலர்கள் போல் முகத்தை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது. இதன் முதல் பாகமான ‘எந்திரன்’ படத்தில், ரோபோ ரஜினியான சிட்டிக்கு மனித உணர்வுகள் வந்தபிறகு, தன்னை உருவாக்கிய டாக்டர் வசீகரன் ரஜினியின் காதலியான ஐஸ்வர்யா ராய் மீது சிட்டிக்கு காதல் பிறக்கும்.

அதேபோல், இந்தப் படத்திலும் எஜி ஜாக்சன் மீது ரோபோ ரஜினிக்கு காதல் பிறந்திருக்குமோ என்ற எண்ணத்தை அந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ரோபோ எமி ஜாக்சன் போஸ்டரும் வெளியிடப்பட்டதால், எமி ஜாக்சனும் இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற வெள்ளிக்கிழமை துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நடைபெற உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Robo rajinikanth love with amy jackson