Advertisment

ரவுடி பேபி காமன் டிபி-யில் சாய் பல்லவி எங்கே? கொந்தளிக்கும் ரசிகர்கள்

அடிப்படையில் டான்ஸரான சாய் பல்லவி தான் முன்னதாக நடித்த படங்களில் அந்தளவுக்கு நடனமாடவில்லை.

author-image
WebDesk
New Update
Rowdy Baby Hits 1 Billion Views

ரவுடி பேபி பாடல்

Rowdy Baby 1 Billion Views: கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

Advertisment

தமிழ் சினிமாவின் ‘பைக்கர் கேர்ள்ஸ்’!

மாரி 2 படத்தில் இடம்பெற்ற, ‘ரௌடி பேபி’ பாடல் வெளியான நாள் முதலே பல மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்டு சாதனை படைத்தது. குறிப்பாக இதற்கு குழந்தைகளும் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்த பாடல் யூ-ட்யூபில் வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது 100 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். முன்னதாக இந்திய திரைப்படங்களில் பஞ்சாப் மொழி பாடல் ஒன்றுதான், முதன்முதலில் 100 கோடி பேர் பார்த்து ரசித்த பாடல். அதன்பின் ஒன்றிரண்டு இந்தி பாடல்கள், இந்த சாதனையை படைத்துள்ளது.

ரௌடி பேபி பாடல், 100 கோடி பார்வையாளர்களை கடந்ததன் மூலம், அதிகம் பார்க்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம், 'காமன் டிபி' ஒன்றை வெளியிட்டது.

’ஷிவானிக்கு இருக்க ஒரே வேலை பாலாவ எண்டெர்டெயின் பண்றது தான்!’

அதில், தனுஷின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், காமன் டிபியில் சாய் பல்லவி எங்கே? என, சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடிப்படையில் டான்ஸரான சாய் பல்லவி தான் முன்னதாக நடித்த படங்களில் அந்தளவுக்கு நடனமாடவில்லை. அவரின் நடன திறமை முழுவதையும், ‘ரவுடி பேபி’ பாடலில் வெளிக் கொணர்ந்திருப்பார். அதனால் இந்தப் பாடலை அதிகம் பேர் பார்த்ததற்கு சாய் பல்லவியின் சிறப்பான நடனமும் ஒரு காரணம். ஆகையால் அவரது படமும் காமன் டிபி-யில் இடம்பெற வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Dhanush Sai Pallavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment