155 மில்லியன் சாதனை படைத்த ரவுடி பேபி... மலர் ரசிகர்கள் ஜிகு ஜிகு தான்

தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடித்துள்ள மாரி 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் ரவுடி பேபி பாடல் 155 மில்லியனை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இதே படத்தின் 2ம் பாகத்தை படைக்கும் பணியில் இவர்கள் களமிறங்கினார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ரவுடி பேபி புதிய சாதனை

முதல் பாகத்தில் மாரி தர லோகல், டானு டானு டானு பாடல்கள் பிரபலமானது. இந்நிலையில், மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” பாடலை “கொலவெறி பார்ட் 2” போல் தனுஷ் வெளியிட்டார். இந்த பாடல் அனைவரது போன்களிலும் ரிபீட் மோடிலேயே இருந்து வருகிறது.

இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியும் இணைந்து நடனமாட, பிரபு தேவா கோரியோகிராஃப் செய்திருக்கிறார். பாடல் வீடியோ வெளியான முதல் நாளிலே பல லட்சம் பேர் இதனை பார்த்து மகிழ்ந்தனர்.

தற்போது இந்த வீடியோவை சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டோர் யூடியூப்-ல் பார்த்துள்ளனர். அதாவது 155 மில்லியன் அளவிர்கு பாடல் வியூஸ் கிடைத்துள்ளது. இதனால் தனுஷ், சாய் பல்லவி மற்றும் படக்குழுவினரும் ஜிகு ஜிகுனு இருக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close