Advertisment

ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி... டபுள் தமாக்காவில் சூர்யா ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கும் ‘சூர்யா 36’ படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
suriya 36

செல்வராகவன் இயக்கும் ‘சூர்யா 36’ படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

Advertisment

அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்சிங். அதன்பிறகு ‘புஸ்தகம்’ மற்றும் ‘என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமுமே ஹிட்டாகவில்லை என்பதால், அவரைத் தமிழ் சினிமா கண்டு கொள்ளவே இல்லை.

இதனால், ஆந்திரா பக்கம் ஒதுங்கிய ரகுல் ப்ரீத்சிங்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இன்றைக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். ஆனாலும், தமிழில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்பது அவருடைய தீராத ஆசையாக இருந்து வருகிறது.

எனவே, சில வருடங்கள் கழித்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், மகேஷ் பாபு ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படமும் ஊத்திக்கொள்ள, தமிழில் நமக்கு ஒரு படம் கூட சக்சஸ் ஆகாதோ என சோர்ந்துவிட்டார் ரகுல் ப்ரீத்சிங்.

இருந்தாலும், கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ஹிட்டாகி, அவரைக் காப்பாற்றியிருக்கிறது. கார்த்திக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால், ரகுல் ப்ரீத்சிங்கை ஹீரோயினாகப் போட்டு அங்கும் படத்தை ஹிட்டாக்கி விடலாம் என்று நினைத்தனர். அவர்கள் அப்படி நினைத்தது ரகுலுக்குத்தான் நல்ல நேரமாகி இருக்கிறது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஹிட்டாகியிருப்பதால், தற்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ரகுலுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் புரமோஷன் சமயத்திலேயே செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ரகுல் ப்ரீத்சிங் தான் ஹீரோயின் என்றார்கள்.

ஆனால், சாய் பல்லவிதான் ஹீரோயின் என்று அதிரடியாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். ‘பிரேமம்’ மூலம் எல்லோரையும் கவர்ந்த சாய் பல்லவி, தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அதன்பிறகு தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்தில் நடிக்கும் சாய் பல்லவி, தொடர்ந்து சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், ரகுல் ப்ரீத்சிங்கும் சூர்யா படத்தில் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். ஆக... ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறார் சூர்யா. எனவே, இந்தப் படம் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் தமாக்காவாக இருக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Tamil Cinema Actor Suriya Sai Pallavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment