சசிகலா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறாரா?

பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து திரையுலகிலும் தொடர்ந்து ஹிட் கொடுத்துவருகிறார் சாய் பல்லவி. கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியான…

By: Updated: December 28, 2018, 03:51:54 PM

பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து திரையுலகிலும் தொடர்ந்து ஹிட் கொடுத்துவருகிறார் சாய் பல்லவி. கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியான மாரி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக சாய்பல்லவி சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அவரும் தனுஷும் இணைந்து நடனமாடியுள்ள ரவுடி பேபி பாடலில் தனது நடத்தால் அனைவரையும் கட்டிப்போட்டார்.

சசிகலா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி

சில படங்களே நடித்தாலும் நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும், சாய்பல்லவிக்கு மற்றுமொரு பெரிய வாய்ப்பு தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குனர் ஏ.எல்.விஜய் தயராகி வருகிறார்.

இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sai pallavi to play sasikala role

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X