பொள்ளாச்சி சம்பவத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் – சமந்தா

இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களுக்கு குரல் கொடுத்து தானே ஆக வேண்டும், என ரசிகர்கள் சொல்வது விரைவில் அவர் காதில் விழட்டும்! 

samantha

நடிகை சமந்தா தற்போது இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸில்’ நடித்து முடித்திருக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடுத்தர குடும்பத்துக்கு புதிதாக திருமணமாகிப் போன வேம்பு என்ற கதாபாத்திரம் சமந்தாவினுடையது.

இந்நிலையில், சூப்பர் டீலக்ஸ் புரோமோஷனில் கலந்துக் கொண்ட அவரிடம், ’பொள்ளாச்சி சம்பவத்திற்கு வாய் திறக்கவில்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “இந்த மாதிரி விஷயங்களை மேற்கோள்காட்டி அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. இதற்கு முன் இப்படி பல விஷயங்களைப் பேசியுள்ளேன். ஆனால் சிலருக்கு மட்டும் தெரிந்த குறிப்பிட்ட விஷயங்கள், பல லட்சம் பேருக்கு தெரிய வருவதை பின்னர் உணர்ந்தேன். அதை நாமே விளம்பரப்படுத்தியது போலாகிவிடும். அதனால் தற்போது பாஸிடிவான விஷயங்களை மட்டுமே பேசுகிறேன்” என்றார்.

இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களுக்கு குரல் கொடுத்து தானே ஆக வேண்டும், என ரசிகர்கள் சொல்வது விரைவில் அவர் காதில் விழட்டும்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha avoids to speak about pollachi sexual assault

Next Story
தளபதி 63: விஜய்யுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!Jackie Shroff joins with Vijay
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express