Advertisment

சந்தோஷமும் புரிதலும் எப்போதும் எங்களிடம் இருக்கும் : சமந்தா - நாகசைதன்யா திருமண மெசேஜ்

சந்தோஷமும் புரிதலும் எப்போதும் எங்களிடம் இருக்கும் என நடிகர் நாகசைதன்யாவை கரம் பிடிக்கும் நடிகை சமந்தா திருமண மெசேஜ் வெளியிட்டார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress samantha, actor nagasaidanya, actor nagarjuna, actor amala, kova, samantha marriage, samantha marriage message

சந்தோஷமும் புரிதலும் எப்போதும் எங்களிடம் இருக்கும் என நாகசைதன்யாவை கரம் பிடிக்கும் சமந்தா திருமண மெசேஜ் வெளியிட்டார்.

Advertisment

தமிழ், தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகை சமந்தா. இவரும் நாகார்ஜூனா-அமலா நட்சத்திர தம்பதியரின் மகன் நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். இரு தரப்பு பெற்றோர் ஒப்புதலுடன் இவர்கள் திருமணம் செய்கிறார்கள்.

நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். எனவே இந்து, கிறிஸ்தவம் என இரு முறைப்படியும் இந்தத் திருமணத்தை நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் கோவாவில் செய்யப்பட்டிருக்கின்றன.

actress samantha, actor nagasaidanya, actor nagarjuna, actor amala, kova, samantha marriage, samantha marriage message சமந்தா-நாகசைதன்யா திருமண அழைப்பிதழ்

கோவாவில் உள்ள டபிள்யூ தங்கம் விடுதியில் சமந்தா – நாகசைதன்யா திருமணம் நடைபெறுகிறது. இன்று (6-ம் தேதி) இந்து முறைப்படி சமந்தா – நாக சைதன்யா திருமணம் நடக்கிறது. நாளை மறுநாள் (7-தேதி) கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்காக கடந்த ஒருவாரமாக கோவாவில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருமண செலவுகளை நாக சைதன்யா குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். வீடியோ, புகைப்படம் எடுக்கும் பொறுப்பை சமந்தா குடும்பத்தினர் கவனிக்கிறார்கள். திருமணத்தையொட்டி சமந்தா, நாகசைதன்யா இருவரும் 3 நாட்களுக்கு முன்பே கோவா சென்று விட்டனர். அங்கு டபிள்யூ தங்கும் விடுதியில் நடைபெறும் திருமண ஏற்பாடுகளை நேரில் கவனித்தனர்.

கோவா கடற்கரைக்கு இருவரும் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இன்று நடைபெறும் திருமணத்தில் நாக சைதன்யாவின் தாயார், தந்தை நாகார்ஜூனாவின் உறவினர்கள் ராணா, வெங்கடேஷ், சுரேஷ்பாபு, நாக சைதன்யாவின் தாத்தா ராமா நாயுடுவின் மனைவி, நாகார்ஜூனாவின் மனைவி அமலா, இவர்களுடைய மகன் அகில் மற்றும் சமந்தா குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் 180 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

சமந்தா திருமண புடவையாக, நாக சைதன்யாவின் பாட்டியின் திருமண சேலையை கட்டுகிறார். இது மும்பையில் நவீன முறைப்படி டிசைன் செய்து மெருகேற்றப்பட்டுள்ளது. திருமணத்துக்காக சமந்தாவுக்கு விலை உயர்ந்த நெக்லஸ் வாங்கப்பட்டுள்ளது. இந்த நகை அணிந்த புகைப்படத்தை சமந்தா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தத் திருமணம் குறித்து சமந்தா கூறுகையில், ‘திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது. இந்த வி‌ஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி. என்னைப் பற்றி மிகவும் நன்றாக தெரிந்து கொண்டவரை எனது கணவராக கரம்பிடிக்கிறேன்.

திருமணத்துக்குப் பிறகு என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. காரணம் இப்போது எங்களிடம் இருக்கும் சந்தோ‌ஷமும், புரிதலும் எப்போதும் இருக்கும். எனவே எங்கள் வாழ்க்கை பயணம் இனிதாக தொடரும்.’ இவ்வாறு அவர் கூறினார்.

Amala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment