Advertisment

Seema Raja Review : சீமராஜா படம் எப்படி? ரசிகர்களுக்கு காத்திருந்த பெரிய ஷாக்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seema Raja Review

Seema Raja Review

Seema Raja Review : பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் ஆகியோர் நடித்த சீமராஜா படம் இன்று மாஸாக ரிலீஸ் ஆனது. ஆனால் படம் எப்படி?

Advertisment

Seema Raja Review : படத்தின் கதை சுருக்கம் :

சிங்கம்பட்டி ராஜ வம்சத்தை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன். புலியம்பட்டி ஊரை சேர்ந்தவர் சமந்தா. சிங்கம்பட்டி ஊருக்கும் புலியம்பட்டி ஊருக்கும் இடையே நீண்ட நாள் பகை நிலவி வருகிறது.

Seema Raja, சீமராஜா, Seema Raja Review Seema Raja, சீமராஜா

இந்த பகைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது இரண்டு ஊருக்கும் சொந்தமாக இருக்கும் சந்தை தான். அந்த சந்தையை கைப்பற்ற நினைக்கிறார்கள் புலியம்பட்டி வில்லன் லால் மற்றும் சிம்ரன்.

Seema Raja Review Seema Raja

இந்த சந்தையை கைப்பற்ற மல்யுத்தம் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சீமராஜாவாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் எதிரி கிராமத்தை சேர்ந்த நபரும் சண்டையிடுகின்றனர். இந்த சண்டையில் எதிரியை அடித்து துவைத்தெடுகிறார் சிவகார்த்திகேயன்.

சீமராஜா கதையில் நடக்கும் பெரிய டுவிஸ்ட்:

இந்த சண்டையின் முடிவில் சிவகார்த்திகேயன் ஜெயித்துவிட, அப்போதுதான் தெரிய வருகிறது சமந்தா லால் முதல் மனைவியின் மகள் என்று. ஒரு வழியாக சண்டையிட்டு சந்தையை வென்றுவிட முயற்சித்த சிவகார்த்திகேயன், சமந்தாவை மனம் முடிப்பாரா? அவர்கள் காதல் ஒன்று சேருமா, இதன் மூலம் இரு ஊர்களுக்கும் இடையே உள்ள பகை நீங்குமா என்பதே இந்த கதை.

Seema Raja Review : சீமராஜா படம் கண்ணோட்டம்:

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் தரமான படமாக களமிறக்கியிருந்தார் இயக்குநர் பொன்ராம். அதே கூட்டணியில் மீண்டும் அவர் இயக்கிய படம் தான் சீமராஜா.

Seema Raja Review

ஆனால் அந்த இரண்டு படங்களில் மக்கள் மற்றும் குழந்தைகள் மனதை வென்ற பொன்ராம் இப்படத்தில் அதை நிகழ்த்த தவறிவிட்டார். வழக்கமாக குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் சூரி காமெடியும் இப்படத்தில் மொக்கை காமெடியாக ரசிகர்களை சலிக்க வைத்துள்ளது.

சீமராஜா படத்தின் மேக்கிங் வீடியோவையே மாஸாக வெளியிட்ட படக்குழு

சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்திருந்த படங்களில் இருந்த அளவிற்கு சிறப்பான கதாப்பாத்திரமாக சீமராஜா ரோல் அமைய தவறிவிட்டது. முதல் பாகத்தில் காமெடி, வழக்கமான கதையை கொண்டிருந்த படம், இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாகத்தில் மொத்தமாக ராஜா வம்சம் கதையாக மாறியுள்ளது.

ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக் மற்றும் சர்பிரைஸ்: 

சீமராஜா முன்னோர் கடம்பவேல்ராஜா (சிவகார்த்திகேயன்) தாய் மண்ணை காப்பாற்ற போரில் சண்டையிடுகிறார். மேலும் தன் தாய் மண் மீது அதிக பற்றுக் கொண்டிருக்கிறார் கடம்பவேல்ராஜா. அப்போது தான் பெரிய ஷாக் காத்திருக்கிறது ரசிகர்களுக்கு. பழைய ராஜா கதையில் ராணியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். படத்தின் வெளியீடு வரை கீர்த்தி சுரேஷ் இதில் நடித்திருப்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது படக்குழு

Seema Raja Review

பழைய ராஜா ஃபிலாஷ்பேக்கிற்கு செல்லும் கதை, மற்றும் அதன் படைப்பு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போர் சீன்களில் சிவகார்த்திகேயன் மேக் அப், ஆடை மற்றும் சுற்றியுள்ள போர் வீரர்கள் அலங்காரம் என அனைத்திற்குமான உழைப்பு பலனை அடைந்துள்ளது.

சீமராஜா வரும் ஆனா வராது !!!

 டி இமான் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களில், குறிப்பான சில பாடல்கள் மட்டுமே வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களில் திருப்திபடுத்த முயற்சித்த இமானின் இசை, பின்னணி இசையில் தோய்வுப் பெற்றுள்ளது.

பல எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் மக்களை இப்படம் பூர்த்தி செய்ய தவறியதற்கு வலுவான கதை இல்லாதது காரணம் என்றே சொல்லலாம்.

Samantha Ruth Prabhu Sivakarthikeyan Seema Raja Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment