Advertisment

ராஜி கற்பனை கதாப்பாத்திரம் என்றாலும், போரில் இறந்தவர்களுக்கு இது என்னுடைய சமர்ப்பணம் - சமந்தா

ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளை காட்டியிருப்பதால் தொடரை நீக்க வேண்டும் என்றும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha ruthprabhu talks about Raji character

Samantha ruth prabhu talks about Raji character : அமேசான் ப்ரைம் சமீபத்தில் ஃபேமிலிமென் சீரிஸின் இரண்டாம் சீசனை வெளியிட்டுள்ளது. இதில் ஈழத் தமிழ் பெண்ணாக, ராஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சம்ந்தா. சமந்தாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரிஸிற்கு கிடைத்த விமர்சனமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி ராஜி கதாப்பாத்திரம் குறித்து எழுதியுள்ளார் சமந்தா.

Advertisment

படத்தின் இயக்குநர் என்னை இந்த கதாப்பாத்திரத்திற்காக அணுகிய போது, இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க தேவையான நிலைத்தன்மை குறித்து நான் விழிப்போடு இருந்தேன். படத்தின் கிரியேட்டிவ் டீம், போர் காலத்தில் ஈழத்தமிழர்கள் நிலை குறித்த ஆவணப்படங்களை எனக்கு காட்டினார்கள். வெளியே கூற முடியாத அளவு இன்னல்கள் அடைந்ததை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன். இந்த ஆவணப்படங்கள் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை என்பதை கவனித்தேன். ஆயிரக்கணக்கான ஈழ மக்கள் மடிந்து கொண்டிருக்கும் போது இந்த உலகம் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்பது போல் எனக்கு தோன்றியது. லட்ச கணக்கானோர் தங்களின் வாழ்க்கையை விட்டுவிட்டு தங்களின் வீடுகளை விட்டு தூர தேசங்களில் போர் ஏற்படுத்திய வடுக்களுடன் வாழுகின்றனர்.

ராஜி என்ற கதாப்பாத்திரம் கற்பனையானது தான். ஆனாலும் என் வரையில் இந்த போரில் இறந்த மக்களுக்கும், போரின் வலிமிகுந்த நினைவுகளோடு வாழும் மக்களுக்கும் சமர்ப்பணம். ராஜியின் கதாப்பாத்திரம் சமநிலை, உணர்திறன் மற்றும் நுணுக்கமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ராஜியின் கதை வெறுப்பு மிக்க, அடக்குமுறைக்கு, பேராசைக்கு எதிராக மனிதர்களாக ஒன்றிணைவதற்கு ஒரு தெளிவான, மிகவும் அவசியமான நினைவூட்டலாக இருக்க விரும்புகிறேன். நாம் அவ்வாறு செய்யத் தவறினால், வருங்காலத்தில் எண்ணற்றவர்களுக்கு அவர்களின் அடையாளம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாக காட்டி, போர் வெறி கொண்ட பயங்கரவாதிகளாக காட்டி இணைய தொடர் உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த இணைய தொடரை நீக்க வேண்டும் என்றும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu The Family Man Season 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment