விஷாலை பப்ளிக்காக அசிங்கப்படுத்திய ஆர்யா.. காரணம் வரலட்சுமியா?

இது யாருடைய ட்வீட்... வரலட்சுமி சொல்லி விஷால் ட்வீட் செய்திருக்கிறார்

நடிகர் விஷால் ’சண்டக்கோழி 2’ படப்பிடிப்பில் வரலட்சுமி குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்தை நடிகர் ஆர்யா பயங்கரமாக கலாய்த்து தள்ளியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா, விஷால், ஷாம், பரத் போன்ற நடிகர்கள் திம் ஃபெரண்ட்ஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களை அனைவரும் ஒன்றாக சேர்த்து நடிகர் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் ஒருவொருகொருவர் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் தங்களை கலாய்த்து கொள்வது வழக்கம்.

சண்டக்கோழி 2

நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

ஆனால் இம்முறை நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி இருவரையும் சேர்த்து பப்ளிக்காக கலாய்த்து இருக்கிறார் நடிகர் ஆர்யா.

சண்டக்கோழி 2 :

’சண்டக்கோழி 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. வரலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தன. இதனைத் தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி குறித்து ட்வீர் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அதில்,” சண்டக்கோழி 2 படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு. வரலட்சுமி சரத்குமார் படப்பிடிப்பில் தனது பங்கை முடித்துவிட்டார். அந்தக் காட்சிகள் நன்றாக இருக்கும். க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் அட்டகாசம். மிக்க நன்றி டார்லிங் வரு. நான் பார்த்ததிலேயே மிகவும் கண்ணியமான தொழில்முறையான நடிகை. அக்டோபர் 18-ஐ எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவிற்கு விஷாலின் உற்ற நண்பரான ஆர்யா ”இது யாருடைய ட்வீட்… வரலட்சுமி சொல்லி விஷால் ட்வீட் செய்திருக்கிறார்” என்று கிணடல் செய்திருக்கிறார்கள். ஆர்யா பப்ளிக்கா தன்னை கலாய்த்தை வழக்கம் போல் விஷால் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close