Advertisment

Sangathamizhan vs Tamilrockers: விஜய் சேதுபதி மாஸ் ஓ.கே.! வசூல் இவ்வளவுதானா?

sangathamizhan Tamil Movie: நீதிமன்றங்களே தடை விதித்தாலும்கூட, இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் இப்படி புதுப் படங்களை ரிலீஸ் அன்றே வெளியிடுவது வாடிக்கை .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sangathamizhan Full Movie Download TamilRockers, sangathamizhan Tamil Movie Download, சங்கத் தமிழன்

sangathamizhan Full Movie Download TamilRockers, sangathamizhan Tamil Movie Download, சங்கத் தமிழன்

Sangathamizhan Full Movie Leaked In Tamil Rockers: விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படத்தின் கலெக்‌ஷனுக்கு தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலாக இருக்கிறது. சென்னையில் முதல் நாள் 32 லட்சம் ரூபாய் கலெக்‌ஷன் செய்திருக்கும் சங்கத் தமிழன் அடுத்தடுத்த நாட்களிலும் இதேபோல கல்லா கட்டுமா? என்கிற எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisment

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம். சில பல சிக்கல்களை எதிர்கொண்டு, நவம்பர் 16-ம் தேதி வெளியானது. இதற்கு ஒருநாள் முன்னதாக விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் வெளியானது.

TamilRockers Leaked sangathamizhan Full Movie: தமிழ் ராக்கர்ஸ் அத்துமீறல்

ஆக்‌ஷனை ஒப்பீடு செய்தால், சங்கத் தமிழனுக்கு பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. நச்சுத் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தை மையமாக வைத்து கதை பின்னப்படுகிறது. அந்த ஆலையின் அதிபரின் மகளாக வரும் ராஷிகன்னா- விஜய் சேதுபதி இடையே காதல்!

போராட்டக்காரர்களை சமரசம் செய்ய, விஜய் சேதுபதியை அனுப்புகிறார் வில்லனான ஆலை அதிபர். அவர் மக்களை சமாதானப்படுத்துகிறாரா? காதலியை கைப் பிடித்தாரா? என்பது கதை! விஜய் சேதுபதி, ஒரு மாஸ் நாயகனாக வெளிப்பட்டிருக்கும் படம். அந்த வகையில் அவரது ரசிகர்களுக்கு இது முக்கியமான படம்.

சங்கத் தமிழனுக்கு முந்தைய நாள் ரிலீஸான ஆக்‌ஷன், சென்னையில் முதல் 2 நாட்களில் 58 லட்சம் ரூபாய் கலெக்ஷன் செய்திருப்பதாகவும், சங்கத் தமிழன் முதல் நாளில் மட்டும் 32 லட்சம் ரூபாய் கலெக்‌ஷன் செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஞாயிற்றுக் கிழமை, கலெக்‌ஷன் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையே சங்கத் தமிழன், ஆக்‌ஷன் ஆகிய இரு படங்களையுமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. எத்தனை முறை நீதிமன்றங்களே தடை விதித்தாலும்கூட, இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் இப்படி புதுப் படங்களை ரிலீஸ் அன்றே வெளியிடுவது வாடிக்கை ஆகியிருக்கிறது. இதனால் சங்கத் தமிழன், ஆக்‌ஷன் ஆகிய இரு படங்களில் வசூலும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது.

 

Madras Rockers Vijay Sethupathi Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment