Advertisment

‘மாவீரன் பிள்ளை’ படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள்!

Cinema News in Tamil : சமூக பிரச்னைகளை மையமாக வைத்து வெளிவர காத்திருக்கும் மாவீரன் பிள்ளை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
Gokulan Krishnamoorthy
New Update
‘மாவீரன் பிள்ளை’ படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள்!

சந்தனக் கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரது மகள் சினிமாவில் நடிகையாக வலம் வர காத்திருக்கிறார் என்ற செய்தி, சினிமா வட்டாரத்தில் இன்றைய ‘ஹாட் டாப்பிக்’.

Advertisment

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு வித்யாரானி, விஜயலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். வீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி, தற்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அவர் நடிக்க உள்ள படத்திற்கு ‘மாவீரன் பிள்ளை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, கே.என்.ஆர்.ராஜா இயக்க, அவரே கதாநாயகனாக நடிக்கிறார்.

publive-image

படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரில், வீரப்பனின் மகள் விஜயலட்சுமி துப்பாக்கி ஏந்திய படி நிற்கிறார். போஸ்டரில் உள்ள வீரப்பனின் மகள் புகைப்படத்தையும், வீரப்பன் துப்பாக்கி ஏந்திய புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. டீசரில், விஜயலட்சுமி கிராமப்புற பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகளை கற்றுத் தருகிறார். மேலும், மது ஒழிப்பு, தண்ணீர் பிரச்னைகள் குறித்தும் படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. வீரப்பனின் மகள் நடிப்பில், சமூக பிரச்னைகளை மையமாக வைத்து வெளிவர காத்திருக்கும் மாவீரன் பிள்ளை திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment