scorecardresearch

“உடையாத செல்போன் வாங்கிக் கொடுக்கணும்” – ரியோவின் தலை தீபாவளி கிப்ஃட்

சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் ரியோ, தலை தீபாவளி கிஃப்ட்டாகத் தன் மனைவி ஸ்ருதிக்கு உடையாத செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

rio raj, shruthi ravi, saravanan meenatchi, vijay tv, diwali gift
சின்னத்திரை வட்டாரத்திலேயே அதிகமான ஃபேன் ஃபாலோயர்ஸ் வைத்திருப்பவர் ரியோ. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் மூலம், நம் வீட்டுப் பெண்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார்.
கடந்த வருட இறுதியில் ஸ்ருதியைக் கரம்பிடித்தவருக்கு, இது தலை தீபாவளி. ‘என்ன ப்ளான் வச்சிருக்கீங்க ப்ரதர்?’ என்று போன் போட்டேன்.
“சென்னைக்கு வந்ததுல இருந்து தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்குப் போறதே குறைஞ்சிடுச்சு ப்ரதர். ஏதாவது ஸ்பெஷல் புரோகிராம் இருந்துகிட்டே இருக்கும். தலை தீபாவளியா இருந்தாலும், இந்த வருஷமும் நமக்கு சென்னையிலதான் தீபாவளி. என்னோட சித்தி வீடு இங்க இருக்குறதுனால, அங்கேயே கொண்டாடிடுவோம்.
தீபாவளி முடிஞ்சதும், தேனி பக்கத்துல இருக்குற மேகமலைக்கு ஒரு ட்ரிப் போகலாம்னு ப்ளான் இருக்கு. போன மாசம்தான் மகேந்திரா கம்பெனியோட தார் ஜீப் வாங்குனேன்… அதுல இன்னும் லாங் ட்ரைவ் போகல. மேகமலை ட்ரிப்புக்கு அந்த ஜீப்ல தான் போகலாம்னு இருக்கேன்.
அவங்க வச்சிருந்த போனை உடைச்சிட்டாங்க. அதனால உடையாத போனா தேடிக்கிட்டு இருக்கேன். அப்படி ஒரு போன் கிடைச்சா சொல்லுங்க ப்ரதர்” என்கிறார் ரியோ. அப்படி ஒரு போன் இருக்கா என்ன?

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Saravanan meenatchi rio rajs thalai diwali plan