Advertisment

விஜய் ரசிகர்களே... சர்கார் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?!?!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarkar Teaser, சர்கார் டீசர்

Sarkar Teaser, சர்கார் டீசர்

தளபதி விஜய் ரசிகர்கள் எல்லாரும் காத்திருந்த முக்கிய விஷயம் சர்கார் டீசர் தான். தற்போது அந்த டீசர் வெளியீடு குறித்த தகவல் ஒன்று கசியத் தொடங்கியுள்ளது.

Advertisment

கத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது.

சர்கார் டீசர் ரிலீஸ் என்று?

அந்த ஆடியோ வெளியீடு விழாவில், இறுதியாக பேசிய விஜய் பல அரசியல் குறியீடுகளை மக்கள் முன்பு விட்டுச் சென்றார். குறிப்பாக ‘நான் முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்” என்று கூறிய வார்த்தைகள் பெரும் விவாதத்திற்கு பாதை வகுத்தது.

தற்போது சர்கார் படத்தின் பாடல்களை ரசித்து வந்த விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது என சில தகவல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. அதாவது இப்படத்தின் டீசர் வரும் ஆயுத பூஜையன்று வெளியாக வாய்ப்புள்ளது என்று பேசிக் கொள்கிறார்கள்.

இந்த தகவல் சிலர் மூலம் கசியத் தொடங்கியது என்று கூறினாலும், அதிகாரப்பூர்வமாக எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே விஜய் ரசிகர்களும் தீராத ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Tamil Cinema Actor Vijay A R Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment