Advertisment

Sarkar : சர்கார் திருவிழா தொடக்கம்! வெடி வெடித்து குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்கார் இசை வெளியீடு

சர்கார் இசை வெளியீடு

Sarkar : முருகதாஸ் இயக்கியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் ஒன்று செப்டம்பர் 24ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Advertisment

Sarkar : சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு :

முருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

September 2018

இதையொட்டி, விஜய் ரசிகர்கள் அனைவரும் டுவிட்டரில் சர்கார் கொண்டாட்டம் என்ற ஹாஷ்டேகை டிரெண்ட்வ் செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்று இரவு முதலே இந்த ஹேஷ்டேகால் சமூக வலைதளம் ஸ்தம்பித்துள்ளது.

இன்று காலை சரியாக 11 மணிக்கு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் (பாடல்) வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று அறிவித்துள்ளது.

September 2018

இந்த அறிவிப்பை தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் அனைவரும் “அடிடா மேளத்த, போட்றா வெடிய” என்று குத்தாட்டம் போடுகின்றனர். எல்லா படங்களை போலவே விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இந்த படமும் ஒரு திருவிழாவாகவே அமைய இருக்கிறது.

Actor Vijay Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment