சர்கார் லீக்... தளபதியையும் தடுமாற வைத்த தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Vijay's Sarkar Full movie in HP Print: தமிழ் ராக்கர்ஸ் வழக்கம்போல தனது வேலையை செய்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில்...

Tamilrockers Leaked Sarkar Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் சினிமா உலகுக்கு பெரும் வில்லனாகவே உருவெடுத்துவிட்டது. சர்கார் படத்தை திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலமாக, எவ்வளவு பெரிய சக்தியாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என சவால் விட்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

நடிகர் விஜய் நடிப்பில்  வெளியான சர்கார் படத்தை சில மணி நேரத்திலேயே லீக் செய்தது தமிழ் ராக்கர்ஸ். சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் சென்று தடை வாங்கியது சன் பிக்சர்ஸ். தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கமும் இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட விடாமல் தடுக்க முயன்றது. அனைவர் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு தமிழ் ராக்கர்ஸ் வழக்கம்போல தனது வேலையை செய்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More: Sarkar Review: விஜய் சொன்ன அந்த ரகசியம், படம் பார்க்கும்போது புரிகிறது

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் படம் தீபாவளி பண்டிகையான நவம்பர் 6-ல் வெளியானது. தமிழ் ராக்கர்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இணைத்தளப் பக்கம் ஒன்று சர்கார் படத்தை ரிலீஸ் தினத்தன்றே ஹெச்.டி பிரிண்ட்டில் வெளியிடுவோம் என்று குறிப்பிட்டிருந்தது.

Vijay's Sarkar Full movie in HP Print Leaks in Tamilrockers website:சர்கார் விஜய்க்கு தமிழ் ராக்கர்ஸ் வடிவில் சோதனை

Vijay’s Sarkar Full movie in HP Print Leaks in Tamilrockers website:சர்கார் விஜய்க்கு தமிழ் ராக்கர்ஸ் வடிவில் சோதனை

Tamilrockes Leaked Sarkar Movie : சர்கார் படம் தமிழ் ராக்கர்ஸ் லீக்

இந்த பதிவையடுத்து, சர்கார் படம் இணையத்தில் வெளியாகாமல் இருக்க படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நீதிமன்றத்தை நாடியது. அதன் விசாரணையில் சர்கார் படம் இணையத்தில் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவும் அதிரடியாக சிறப்பு கண்காணிப்பு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தது படக்குழு. இவர்கள் மட்டுமின்றி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இப்படத்தை லீக் செய்ய வேண்டாம் ப்ளீஸ் என்று கெஞ்சியும் கேட்டிருந்தனர்.

Tamilrockers Leaked Sarkar Movie

இந்நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கதை விவகாரத்தில் கல்லடி பட்ட சர்கார் குழுவினருக்கு இது இன்னொரு ஷாக்! வரும் காலங்களில் தமிழ் படங்களை தமிழ் ராக்கர்ஸ் பிடியில் இருந்து எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

இந்திய சினிமா உலகில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக பெரிய சினிமா இண்டஸ்ட்ரி தமிழ்தான். அரசியல், சமூக செல்வாக்கு பெற்ற நபர்கள் இங்கு கோலோச்சுகிறார்கள். சொல்லப்போனால் கோலிவுட்டைப் போல ஒரு மாநிலத்திற்கு முதல்வர்களை உருவாக்கிக் கொடுத்த சினிமா இண்டஸ்ட்ரி வேறு எங்கும் இல்லை. எனவே இன்றளவும் கோலிவுட் காரர்களின் அரசியல் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் இவர்களாலும் தமிழ் ராக்கர்ஸை ஒன்றும் செய்ய முடியாதது வேதனை!

உலகில் வேறு எங்கும் ஒரு சினிமா இண்டஸ்ட்ரி, இப்படி ஒரு இணையதளத்திடம் மண்டியிடும் நிலை இல்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close