ஆர்யா திருமணம் குறித்து சீதாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?

நடிகர் ஆர்யாவை முன்னிருத்தி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற சீதாலட்சுமி ஆர்யாவின் திருமணம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடுவதாகவும், போட்டியின் இறுதியில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரையே ஆர்யா திருமணம் செய்துக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான […]

seethalakshmi, சீதாலட்சுமி
seethalakshmi, சீதாலட்சுமி

நடிகர் ஆர்யாவை முன்னிருத்தி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற சீதாலட்சுமி ஆர்யாவின் திருமணம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடுவதாகவும், போட்டியின் இறுதியில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரையே ஆர்யா திருமணம் செய்துக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுடன் ஆர்யா டேட்டிங் எல்லாம் சென்று அதையே தனி எபிசோடாக கூட வைத்தார்கள். ஆனால் ஆர்யாவை திருமணம் செய்ய அனைத்து பெண்களும் அவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக மூன்று பெண்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர். அவர்களில் ஒருவர் தான் சீதாலட்சுமி.

ஆர்யா திருமணம் குறித்து சீதாலட்சுமி கருத்து

மூன்று பெண்களுமே மணக்கோலத்தில் மேடையில் வந்து நின்ற பிறகு, இவர்களில் யாரையுமே தேர்வு செய்ய இப்போது முடியாது என்று அதிர்ச்சியளித்தார் ஆர்யா. சரி அவர்களில் ஒருவரை இப்போது தேர்வு செய்யவில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் தேர்வு செய்வதாக வாக்களித்தார். ஆனால் இப்போது நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்த தகவலால் பலரும், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை தொடர்புக் கொண்டு காரணம் கேட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சீதாலட்சுமியும், தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

seethalakshmi, சீதாலட்சுமி

அதில், “ஆர்யா-சாயிஷா திருமணம் குறித்து கடந்த சிலநாட்களாக பலரும் எனக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள். முடிந்தது முடிந்ததுதான். நாம் முன்னகர்ந்து செல்வோம். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் நலமாக உள்ளேன். இதிலிருந்து நகர்ந்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கை மற்றும் தொழிலில் கவனம் செலுத்துகிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Seethalakshmi reacts to arya wedding

Next Story
வருகிறதா மங்காத்தா 2..? வெங்கட் பிரபு சொன்ன வார்த்தையால் அதிர்ந்த அரங்கம்mankatha 2 venkat prabhu, இயக்குநர் வெங்கட் பிரபு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express