Advertisment

ராமராஜன் – நளினி விவாகரத்துக்கு நான் காரணமா? மன உளைச்சலில் சீரியல் நடிகை

2001-ம் ஆண்டு வெளியான ராமராஜனின் சீறிவரும் காளை படத்தில் நடிகை அபிதா நாயகியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராமராஜன் – நளினி விவாகரத்துக்கு நான் காரணமா? மன உளைச்சலில் சீரியல் நடிகை

ராமராஜன் – நளினி தம்பதி விவாகரத்து பெற்றதற்கு நான் தான் காரணம் என்று வதந்திகள் பரவியதால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக நடிகை அபிதா தெரிவித்துள்ளார்.

Advertisment

1997-ம் ஆண்டு வெளியான நெப்போலியனின் எட்டுப்பட்டி ராசா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறமுகமானவர் நடிகை அபிதா. தொடர்ந்து 2 மலையாளப் படங்களில் நடித்த இவர், 1999-ம் ஆண்டு வெளியாகி நடிகர் விக்ரமுக்கு வெற்றியை கொடுத்த சேது படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ள அபிதா, சின்னத்திரையில் திருமதி செல்வம் என்ற தொடரின் மூலம் இல்லத்தரசிகளின் நெஞ்சங்களை கவர்ந்தார். தற்போது திருமணமாகி குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்ட அபிதா, ஜீ தமிழின் மாரி சீரியல் மூலம் ரீ-என்டரி கொடுத்துள்ளார்.

இதனிடையே சமீபத்தில் அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள நிலையில், ராமராஜன் – நளினி விவாரத்து குறித்து அபிதா கூறியது தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ராமராஜனின் சீறிவரும் காளை படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

publive-image

இந்த படம் ஷூட்டிங்கின் போது அபிதா செட்டில் அமைதியாக யாருடனும பேசாமல் இருப்பேன். அப்படி இருந்தும் ராமராஜன் நளினி விவாகரத்து பெற்றதற்கு காரணம் தான் தான் என்ற வதந்திகள் பரவியது. நான் அதுவரை நளினி மேடமை பார்த்தது கூட இல்லை. சில பத்திரிக்கைகளில் கூட செய்திகள் வெளியானது. இதை பார்த்து எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் பல மாதங்கள் கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

80-களில் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த ராமராஜன், நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திருமணம் நடத்தி வைத்த இந்த தம்பதிக்கு அருண் அருணா என்ற ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த தம்பதி கடந்த 2000-ம் ஆண்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment