Advertisment

கணவருடன் மோதலுக்கு தயாரான ஆல்யா... அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்

முதல் பிரசவத்திற்கு பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா 2-வது பிரசவத்தின் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார்.

author-image
WebDesk
New Update
கணவருடன் மோதலுக்கு தயாரான ஆல்யா... அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் நடிகை ஆல்யா மானசா தற்போது தற்போது சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் அறிமுகமான இவர் அந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததது.

முதல் பிரசவத்திற்கு பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா 2-வது பிரசவத்தின் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக நடிகை ரியா நடித்து வருகிறார். தற்போது குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆல்யா மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிப்பாரா அல்லது வேறு டிவி சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையெ தற்போது ஆல்யா மானசா சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரக்கும் புதிய சீரியலில் ஆல்யா மானசா லீடு ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீரியலுக்காக ஆல்யா மானசா ஏற்கனவே கமிட் ஆகிவிடடார் என்றும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த ஆல்யாவின் கணவர் தற்போது சன்.டிவியின் கயல் சீரியலில் நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் கயல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், தற்போது கணவருக்கு போட்டியாக ஆல்யா சன்டிவி சீரியலில் கமிட் ஆகியுள்ளது இருவருக்கும் இடையே டிஆர்பி ரேட்டிங்கில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதனிடையே விஜய் டிவி சீரியலில் இருந்து பிரசவத்திற்காக விலகிய ஆல்யா அதன்பிறகு சன்.டிவி சீரியலில் கமிட் ஆகியுள்ளது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சம்பள பிரச்சனை காரணமாகவே ஆல்யா சன்.டிவி சீரியலுக்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து ஆல்யா தரப்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial Alya Manasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment