Serial Actress Alya Manasa Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது.
ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நாயகியாக ஆல்யா மானசா நடிக்கிறார். அவருடைய கணவர் சஞ்ஜீவ் காற்றின்மொழி சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது சின்னத்திரை சீரியல் ஜோடிகளில் பிரபலமான ஜோடியாகவும் ஆல்யா மானசா – சஞ்ஜீவ் வலம் வருகின்றனர்.
சமூகவலைத்தள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி தற்போது ‘சஞ்ஜீவ் ஆல்யா’ என்ற யூடூப் சேனலை நடத்தி வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவ்வப்போது புகைப்படங்களையும் விடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். தவிர இன்ஸ்டா பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் "நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? " என கேட்டுள்ளார். அதற்கு தலையாட்டிய படி கர்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார் "ஆல்யா மானசா".
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.