Advertisment

ரீல்ஸ் பண்ற அவசரத்துல இத மறந்துட்டியேமா... சுந்தரி நடிகையின் வைரல் வீடியோ

சினிமாவில் நுழைய நிறம் ஒரு தடை இல்லை திறமை இருந்தால் போதும் என்பதை ஆணித்தனமாக நிரூபித்த பெருமை கேப்ரியல்லாவுக்கு உண்டு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரீல்ஸ் பண்ற அவசரத்துல இத மறந்துட்டியேமா... சுந்தரி நடிகையின் வைரல் வீடியோ

சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் முக்கியமானவர் கேப்ரியல்லா. ரஜினியின் கபாலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து நயன்தாராவின் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

Advertisment

பாசமலர், செத்தும் ஆயிரம் பொன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான கேப்ரியல்லா தற்போது சன்டிவியின் சுந்தரி சீரியல்ல முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் நடிகையாக மாறியுள்ள கேப்ரியல்ல சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சினிமாவில் நுழைய நிறம் ஒரு தடை இல்லை திறமை இருந்தால் போதும் என்பதை ஆணித்தனமாக நிரூபித்த பெருமை கேப்ரியல்லாவுக்கு உண்டு.

சீரியல் மற்றும் சினிமா என நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் கேப்ரியல்லா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு ஆல்பம் பாடலை பாடியுள்ளார். மேலும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹமான் ஃபாலோயராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் கேப்ரியல்லா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த கேப்ரியல்லா, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்யதுள்ளார். குளு குளு வெண்பனி போலெ என்று பாடல் தொடங்கும்போது நடந்து வரும் கேபி, அடுத்த சில விநாடிகளில் தனது ஹேண்ட்பேக் திறந்துள்ளதை பார்த்து சிரிக்கிறார். உடனே வீடியோவில் பாடலும் காமெடி மியூசிக்காக மாறுகிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரீஸ்ல் பண்ற அவசரத்துல பேக் மூட மறந்துட்டியேமா என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Instagram Gabriella Sellus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment