Advertisment

பப்ளியா இருந்த விஜய் டி.வி ஜாக்குலின் இப்போ ஆளே மாறிட்டாங்க... ஃபிட்னஸ் சீக்ரட்ஸ் வீடியோ!

இதனால் கிண்டலுக்கு ஆளான ஜாக்குலின் தற்போது கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என்னால சுத்தமா முடியல... ரொம்ப கொடுமை படுத்துறாங்க.. விஜய் டிவி பிரபலம் வாக்குமூலம்

பிரபல டிவி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான ஜாக்குலின் உடல் எடையை குறைத்து ஸ்லிமாகி வெளியிட்டுள்ள போட்டோ இணைத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Advertisment

சின்னத்திரையின் விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலின், ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட நடுவர்கள் இருவரும் தொழில் முறையிலான உறவில் இருக்கும்போது அவர்கள் டேட்டிங் செய்வதாகக் கூறி கிண்டல் செய்தனர்.

தொடர்ந்து விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின், நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த  பெரிய திரையில் அறிமுகமானார். குறிப்பாக இந்த படத்தில் அன்புதாசனுடன் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு தனது தொலைக்காட்சி முதல்முறையாக 'தேன்மொழி பிஏ' என்ற சீரியலில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவருக்கு சீரியல் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிக்க வாய்ப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 26 வயதான ஜாக்குலின் சற்று குண்டாக இருப்பார்.

இதனால் கிண்டலுக்கு ஆளான ஜாக்குலின் தற்போது கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, மேலும் அவரது சமீபத்திய புகைப்படங்கள் அவரது உடல் மாற்றத்தைக் வெளிக்காட்டி வரும் நிலையில், இதை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமைடைந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijay Tv Anchor Jacqueline
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment