Advertisment

ஆண்குழந்தை பெற்றெடுத்த பாக்யலட்சுமி சீரியல் நடிகை: புகைப்படத்துடன் வெளியான பதிவு… ரசிகர்கள் வாழ்த்து

Baakiyalakshmi serial actress Jennifer blessed with baby boy; here is her latest insta post Tamil News: பாக்யலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial Actress Jennifer Tamil News: jennifer blessed with baby boy

Serial Actress Jennifer Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்தவர் ஜெனிபர். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜெனிபருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ஆனால், அவரோ இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.

Advertisment
publive-image

பின் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ராதிகா வில்லியாக மாற்றப்படுவதாலும் தான் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்திற்கு அதிக ரசிகர்கள் இருந்த நிலையில் ஜெனிபர் வெளியேறியது அவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது இந்த கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி ராதிகாவாக நடித்து வருகிறார்.

publive-image

நடிகை ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிறகு அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

publive-image

சமீபத்தில் கூட, ஜெனிபர் வீட்டில் மிகவும் சிம்பிளாக நடத்த வளைகாப்புக்கு பிறகு அவரது கணவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோ மற்றும் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

publive-image
publive-image

இந்நிலையில், நடிகை ஜெனிபருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Entertainment News Tamil Tv Serial Baakiyalakshmi Serial Vijaytv Serial Bakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment