Advertisment

குழந்தைகளின் பயத்தை போக்குங்கள்... ஸ்ரீமதி மரணம் குறித்து பிரபல சீரியல் நடிகை கருத்து

ஸ்ரீமதி மரணம் தொடர்பான செய்திகள் வெளியானதில் இருந்து நடிகை லட்சுமி இது தொடர்பான தனது யூடியூப் தளத்தில் வீடியோ பதிகளை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
குழந்தைகளின் பயத்தை போக்குங்கள்... ஸ்ரீமதி மரணம் குறித்து பிரபல சீரியல் நடிகை கருத்து

கள்ளக்ககுறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக பிரபல சீரியல் நடிகை லட்சுமி கூறி கருத்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராம்த்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி களக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ள சக்தி மேல்நிலை பள்ளியின் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி அதிகாலை திடீரென பள்ளியில் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவர்கள், மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே ஈடுபட்ட இந்த போராட்டத்தில் 2-வது நாள் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் எழுந்த நிலையில். மாணவி படித்த சக்தி பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் எரிக்கப்பட்டது

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது சிபிசிஐடி போலீசார் மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜெஸ்டிஸ் ஸ்ரீமதி என்ங ஹேஸ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில். பிரபல சீரியல் நடிகை தற்போது வெளியிட்டுள்ள கருத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வகையில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான செய்திகள் வெளியானதில் இருந்து இது தொடர்பான தனது யூடியூப் தளத்தில் வீடியோ பதிகளை வெளியிட்டு வரும் .சின்னத்திரையில் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை லட்சுமி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பேசியுள்ள பதிவில்.

நான் ஸ்ரீமதி விஷயத்தை கமர்சியலாக பார்க்கவில்லை. நாம் சொல்கிற கருத்தை 100 பேர் கேட்டாலும் போதும் என்று தான் நான் ஸ்ரீமதி குறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தேன். இதுவரைக்கும் ஸ்ரீமதி கூட படித்த பிள்ளைகள் யாருமே ஏன் எதுவும் சொல்ல தயங்குகிறார்கள்? தவறு நடந்தால் அதை தயங்காமல் வெளியே வந்து சொல்லுங்கள். இனி ஒருத்தருக்கும் இப்படி ஒரு நிலைமை நடக்கக் கூடாது. அதேபோல் குழந்தை ஒரு விஷயத்தைச் சொல்லும்போது பெற்றோர்கள் அதை அசிங்கம், அவமானம் என்று சொல்லாதீர்கள், நினைக்காதீர்கள்.

பார்ப்பவர்களுக்கு அது ஒரு நாள் நியூஸ் மட்டும் தான். அதனால் பாதிக்கப்படப்போவது நம்முடைய குழந்தைகள் தான். முதலில் குழந்தைகளிடம் எதையும் மூடி மறைக்க கூடாது என்று சொல்லிக்கொடுங்கள். அவர்களுக்குள் இருக்கும் பயத்தை போக்குங்கள். பள்ளி விட்டு வந்ததும் இன்று வகுப்பில் என்ன நடந்தது என்று பொறுமையாக பிள்ளைகளிடம் கேளுங்கள். குழந்தைகளுக்கு எல்லா விஷயத்தையும் எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். தைரியமாக இருக்கச் சொல்லிக் கொடுங்கள் கூறியள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sembaruthi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment