Advertisment

மாமல்லபுரத்தில் ஹனிமூன்... 'புருஷா' என கணவரை கொஞ்சிய மகாலட்சுமி!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரும், நடிகை மகாலட்சுமியும் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வெளியானது.

author-image
WebDesk
New Update
மாமல்லபுரத்தில் ஹனிமூன்... 'புருஷா' என கணவரை கொஞ்சிய மகாலட்சுமி!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள முதல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை சீரியலில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் மகாலட்சுமி, சன்டிவியின் விஜேவாக தனது சின்னத்திரை வாழக்கையை தொடங்கினார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், சன்டிவியின் அரசி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து வாணிராணி, தேவதையை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த மகாலட்சுமி, தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்கும்போது அந்த சீரியலின் நாயகன், ஈஸ்வருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தகவல் வெளியானது. அதன்பிறகு ஈஸ்வரின் மனைவி புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரும், நடிகை மகாலட்சுமியும் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வெளியானது. இந்த படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர், ‘மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா. Coming soon live in FAT MAN FACTS Kutty story with my pondatiiiii  என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும நிலையில், திருமணத்திற்கு பின் முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ள மகாலட்மி, ‘என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி.. உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய்.. லவ் யூ அம்மு’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஹனிமூன் புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஹாலக்ஷ்மி ‘வாழ்க்கை அழகானது அதை நீ செய்து விட்டாய் என் புருஷா என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment