இணையத்தை தெறிக்க விடும் ஷிவானி நாராயணன் டான்ஸ் – வீடியோ

‘வாத்தி கம்மிங் ஒத்து’ பாடலுக்கு பலரும் நடனமாடி அந்த வீடியோவை, இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Shivani Narayanan, vaathi coming othu dance video
Shivani Narayanan

Shivani Narayanan : விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து, ’கடைக்குட்டி சிங்கம்’ சீரியலில் நடித்தார். பின்னர் திடீரென அதிலிருந்து வெளியேறினார். தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’இரட்டை ரோஜா’ சீரியலில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு உதவும் அஜித் டீம்!

ஷிவானிக்கு சினிமா நடிகைகளைப் போலவே ரசிகர்கள் அதிகம். இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். வித விதமான படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவரது ஃபோட்டோக்களில் லைக்ஸ் மழை பொழியும்.

 

View this post on Instagram

 

Vaathi Coming ????❤️ .. 1/21

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

இந்நிலையில் தற்போது ஷிவானியின் டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ’மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கமிங் ஒத்து..’ பாடலுக்கு தான் அவர் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடீயோவை தற்போது வரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் மக்களை துன்புறுத்தக் கூடாது என பொதுநல வழக்கு

விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் கடந்த 15-ம் தேதி வெளியாகின. இதில் ‘குட்டி ஸ்டோரி’ பாடலை விஜய் பாடியிருக்கிறார். குறிப்பாக ‘வாத்தி கம்மிங் ஒத்து’ பாடலுக்கு பலரும் நடனமாடி அந்த வீடியோவை, இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் நடிகர் சாந்தனுவின் நடனம் மிகப்பெரும் அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial artist shivani narayanan vaathi coming dance video

Next Story
கொரோனோ தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு உதவும் அஜித் டீம்!dhaksha team helps TN govt, corona prevention, covid 19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express