Advertisment

அடுத்தடுத்த திருப்பங்கள்.. எதிர்பார்ப்பை கூட்டும் தமிழ் செல்வி, அரண்மனை கிளி.

நின்று போகும் தமிழ்செல்வியின் கல்யாணம் மீண்டும் நடக்குமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
serial promo video

serial promo video

serial promo video: இன்று ஒளிப்பராப்பாக இருக்கும் சன் டிவியின் தமிழ்செல்வி, விஜய் தொலைக்காட்சியில் அரண்மனை கிளி இரண்டு சீரியல்களில் ப்ரோம்க்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Advertisment

today serial promo : சன் டிவியில் சமீபத்தில் ஒளிப்பரப்பாக தொடக்கிய சீரியல்களில் தமிழ் செல்வி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் முதல் ப்ரோமில் நடிகை மீனா வந்து தமிழ்செல்வியை அறிமுகப்படுத்தி வைத்தார். அதிலிருந்து சீரியலை பார்க்க தொடங்கிய மக்கள் தொடர்ச்சியாக அதை பின் தொடர்கிறார்கள்.

ஆயுத எழுத்து: பள்ளிக் கூடத்துக்கு போனா பசங்க கெட்டு போயிருவாங்கலாம், என்ன அநியாயம் இது?

சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாமியார், மருமகள், கடவுள் பக்தி, அப்பாவியாக கொடுமைப்படுத்தப்படும் பெண் கதாப்பாத்திரங்களுக்கு மவுசம் கொஞ்சம் அதிகம். அதை நன்றாக புரிந்துக் கொண்ட அரண்மனை கிளி சீரியலின் இயக்குனர் மிகவும் ரசிக்கும் வகையில் தொடரை மக்களிடம் கொண்டு சேர்கிறார். அர்ஜூன் கால் வந்து நடப்பது தான் இந்த தொடரின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ஆகும்.

tamil selvi promo : பல்வேறு தடைகளுக்கு பிறகு தமிழ்செல்வி கல்யாணம் மீண்டும் உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ரவி முடிவு செய்துள்ளார். மாப்பிள்ளையை கடத்தி கல்யாணத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது அவனின் திட்டம். ரவியின் கணக்கு ஜெயிக்குமா? நின்று போகும் தமிழ்செல்வியின் கல்யாணம் மீண்டும் நடக்குமா?

Aranmanai Kili promo : தனது அண்ணனை வேண்டாம் என்று கூறி நிராகரித்து கல்யாணத்திற்கு அன்று ஓடிப்போன ஜானுவின் அக்காவை காதலிக்கிறார் அர்ஜூன் தம்பி அருண். இவரை பலமுறை நிலா கூட வெளியில் சுற்றித்திரியும் போது ராஜேஸ்வரி உட்பட பலரும் சந்தேகித்து கண்டித்தனர். ஆனால் ஏதோ ஏதோ பொய் சொல்லி தப்பித்த அருண் இன்று கையும் களவுமாக மாடிக் கொள்கிறார்.

sathya promo :

விபத்தில் மாட்டிக் கொள்ளும் சத்யாவின் உயிரை காப்பாற்ற பிரபு அவரை தூக்கிக் கொண்டு போலீசாரிடம் சென்று உதவி கேட்கிறார். சத்யாவை மீண்டும் பழைய மாறி பார்க்க வேண்டும் என அழும் பிரபுவிற்கு நண்பர்கள் ஆறுதல் சொல்கின்றனர். வேக வேகமாக சத்யாவை மருத்துவமனைக்கு பிரபுஅழைத்து செல்கிறார். இன்று அவருக்கு என்ன நடந்தது மீண்டும் உயிருடன் சத்யா வருவாரா? போன்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment