100 மாற்றுத்திறனாளி சிறுவர்களுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய ஷாருக் கான்

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான், 100 மாற்றுத்திறனாளி சிறுவர்களுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான், 100 மாற்றுத்திறனாளி சிறுவர்களுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியுள்ளார்.

பாலிவுட் நடிகரான ஷாருக் கானுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். பிஸியான நடிகராக இருந்தும், அப்பாவாக தன் கடமையை செய்யத் தவறியதில்லை அவர். அதேசமயம், சமூகப்பற்றுக் கொண்டவர்.

நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தன்னுடைய குழந்தைகளுடன் கொண்டாடாமல், 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். தன்னுடைய படத்தின் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு அவர்களை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது, ‘தில்வாலே’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘துகுர் துகுர்’ பாடலுக்கு குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஷாருக் கான்.

இன்னொரு ட்வீட்டில், குழந்தைகளுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு, ‘இதுதான் மிகச்சிறந்த குழந்தைகள் தினம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய மகன்கள் ஆர்யன் மற்றும் ஆப்ரம் டான்ஸ் ஆடிய வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஷாருக் கான்.

 

×Close
×Close