Advertisment

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்?

உதயநிதி ஸ்டாலினை வைத்து பி.எஸ்.மித்ரன் இயக்கப்போகும் படத்தில், ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்?

உதயநிதி ஸ்டாலினை வைத்து பி.எஸ்.மித்ரன் இயக்கப்போகும் படத்தில், ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார் பி.எஸ்.மித்ரன். இந்தப் படத்தில் ஹீரோயினாக ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்டபோது, “பி.எஸ்.மித்ரன் என்னிடம் கதை சொன்னது உண்மைதான். எனக்கும் அந்தக் கதை ரொம்பவே பிடித்திருக்கிறது. பி.எஸ்.மித்ரன் தற்போது விஷாலை வைத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகே அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்குவார். அப்போதுதான் படத்தில் நான் இருக்கிறேனா என்பது தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tamil Cinema Vishal Udhayanidhi Stalin Shraddha Srinath Ps Mithran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment