எப்படி இருந்த சரிகா? சுருதிஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

சுருதிஹாசன் தனது தாய் சரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த சரிகா, இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

எப்படி இருந்த சரிகா? சுருதிஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் சுருதிஹாசன் மற்றும் கக்‌ஷரா ஹாசனின் தாய், நடிகை சரிகா சமீபத்தில் தனது மகள் சுருதிஹாசன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த சரிகா, இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகராக கோலோச்சுபவரும் ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல்ஹாசனின் முன்னாள் மனைவிதான் நடிகை சரிகா.

உலகநாயகன் கமல்ஹாசன் தனது முதல் மனைவி வாணி கணபதியை விவகாரத்து செய்த பிறகு, நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அப்போது, நடிகை சரிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல்ஹாசன் – சரிகா திருமணம் 1988-ம் ஆண்டு மிகவும் எளிமையாக நடந்தது. சரிகா – கமல்ஹாசன் தம்பதிக்கு சுருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட கமல்ஹாசன் – சரிகா தம்பதி 26 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

தந்தை கமல்ஹாசனும் தாய் சரிகாவும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தாலும், சுருதிஹாசனும் அக்‌ஷராவும் தொடர்ந்து சரிகா மற்றும் கமல்ஹாசன் உடன் அன்புடன் இருந்து வருகின்றனர். சரிகா மும்பையில் இருப்பதால், சுருதிஹாசனும் அக்‌ஷரா ஹாசனும் தாய் சரிகாவைப் பார்க்க மும்பைக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்தான், சுருதிஹாசன் சமீபத்தில் மும்பையில் தனது தாய் சரிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுருதிஹாசன் தனது தாய் நடிகை சரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மறும் நெட்டிசன்கள் இதுவா சரிகா பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை சரிகாவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், எப்படி இருந்த சரிகா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்… உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார் என்று கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருவதால் சரிகா – சுருதிஹாசன் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Shruti haasan mother sariha latest photo goes viral